பிக் பாஸ் சீசன் 3 – அடுத்து குடியேற போவது இவங்கதானா ?

649

பிக் பாஸ்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில், மக்களை அதிகம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி.

தமிழை பொறுத்தவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த இரண்டு சீசன்கள் தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் தான் வரவிருக்கும் பிக் பாஸ் 3ம் பாகத்தையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டை பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்று அந்த வீட்டில் 100 நாட்களுக்கு குடியேறப்போகும் சில போட்டியாளர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்டியல் பின்வருமாறு

1. பிரபல செய்தி வாசிப்பாளர் – பாத்திமா பாபு
2. இயக்குனர் மற்றும் நடிகர் சேரன்
3. “ஜாங்கிரி” மதுமிதா
4. நடன இயக்குனர் சாண்டி
5. “விசில்” நடிகை ஷெரின்
6. “ரஜினியின் மருமகள்” சாக்ஷி அகர்வால்
7. பிரபல பாடகர் மோகன் வைத்யா
8. பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன்
9. பருத்திவீரன் சரவணன்
10. மலேஷியா நாட்டை சேர்ந்த ஒரு ஆண் மாடல்
11. இலங்கையை சேர்ந்த ஒரு மாடல்
12. கவண் பட நடிகை ஒருவர்

என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் சீசன் 3 நாளை (23.06.2019) தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of