உச்சம் தொட்டு பின் வீழ்ச்சி அடைந்த ‘BIG DOG’

374

‘BIG DOG’ அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட இந்த நிறுவனம், 1994ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் நிறுவனம். கிளாசிக் என்று அழைக்கப்படும் பழமையான வடிவம் கொண்ட நீளமான பைக் தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்டிய இந்த நிறுவனம் அண்மையில் பல காரணங்களால் மூடப்பட்டது. இந்த நிறுவனம் தான் வெளியிட்ட முதல் Old Smokey என்ற வாகனத்தால் சுமார் இரண்டு மில்லியனுக்கும் மேல் வியாபாரம் செய்தது.

pit-bull big dog

இந்த வெற்றியை தொடர்ந்து சில வித்யாசமான வாகனங்களை இந்த நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டது. Husky, Pit bull, K-9 உள்ளிட்ட ஒன்பது மாடல்களை இந்த நிறுவனம் இதுவரை வெளியிட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு இந்த நிறுவனம் வெளியிட்ட Pit bull என்ற ஒரு பைக் அந்த ஆண்டிற்கான “Excellence In Motorcycling Award” பெற்றது குறிப்பிடத்தக்கது.

boxer big dog

இந்திய மதிப்பில் பல லட்சங்களுக்கு விற்கப்பட்ட இந்த நிறுவன வாகனங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியாவிலும் சிலர் இந்த கம்பெனி பைக்களை வாங்கினார். இறுதியாக இந்த கம்பெனி வெளியிட்ட ‘Big Dog K-9 என்ற வாகனம் சுமார் 49 லட்சம் மதிப்புக்கொண்டதாக விற்பனைக்கு வந்தது. 300கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட இந்த நிறுவனம் இடப்பிரச்சனை காரணமாக கடந்த 2013ம் ஆண்டு மூடப்பட்டது. 16 ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இந்த நிறுவனம்.

Advertisement