சாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

1015

பிக் பாஸ் வீட்டில் அதிக மக்கள் ஆதரவையும் சக போட்டியாளர் ஆதரவையும் கொண்டவர் சாண்டி மாஸ்டர், வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் மட்டுமே அல்லாமல்,

கமலுக்கு பிடித்த ஒரு போட்டியாளரும் கூட அவரது நகைச்சுவை உணர்வு அவரது அனைத்து டாஸ்க்கிலும் வெளிப்பட கூடியது, குறிப்பாக எந்த நிலையிலும் சாண்டியின் காமெடி இல்லாமல் நிகழ்ச்சி முடிவும் பெறுவது இல்லை.
ஒருபக்கம் சாண்டி மாஸ்டர் டாஸ்க்கு, கலாய்க்கிறதுன்னு சக்க போடு போட்டு வந்தாலும் கூட அடுத்த பக்கம் அவரது, அளவு கடந்த அன்பின் மகளை பிரிந்தது குறித்து அவருக்குள்ள இருக்கும் வலியை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய. அபிராமி மோகன் வைத்தியா, சாக்‌ஷி என தனது நண்பர் பட்டாளங்களை சந்தித்து வரும் நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

வெளியிட்ட சில மணி நேரத்திற்க்குள்ளாக பெரும் வரவேற்பைப் வரவேற்பைப் பெற்று வைரலாகி வரும் புகைப்படம் என்ன தெரியுமா ? சாண்டி மாஸ்டர் குடும்பத்திற்கு அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி தான்.

அபிராமி சாண்டி மனைவி சில்வியா மற்றும் அவரது மகள் லாலா வுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், அதில் இந்த நாள் லாலவுடன் சிறப்பாக இருந்தது என குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே சித்தப்பு சரவணன் சாண்டி குடும்பத்தை, தனது மனைவி மகனுடன் சென்று பார்த்து புகைப்படங்கள் வெளியானது வைரலானதை அடுத்து இந்த புகைப்படமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of