பிக்பாஸ் இறுதிப்போட்டியில் இப்படியொரு சம்பவமா? – அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நடிகை மதுமிதாவின் கணவர்..!

372

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்று கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினர். சாண்டி, லாஷ்லிய மற்றும் ஷெரின் ஆகியோர் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்தனர்.


இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சியின் எடிட்டிங்கில் நடந்த குளறுபடி ஒன்று வீடியோவாக வைரலாகிவருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவரும்,அவரது கணவரும் இறுதிப்போட்டிக்கு அழைக்கப்படவில்லை. 

ஆனால் தான் கலந்துகொண்டதுபோல் வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக மதுமிதாவின் கணவர் மோசஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த செயலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய தனியார் தொலைக்காட்சி உரிய பதிலளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.