ஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..

4093

தொலைக்காட்சி வரலாற்றில், அதிக அளவு டி.ஆர்.பி ரேட்டிங் கொண்ட நிகழ்ச்சிகளில் முதலில் இருப்பது பிக்-பாஸ் தான். பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, தமிழில் வெற்றிகரமாக 3 சீசன்களை கடந்துள்ளது.

தற்போது 4-வது சீசனுக்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதில் யாரெல்லாம் கலந்துக்கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில், ஓட்டல் அறையில், பிரபலங்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இவர்கள் அனைவரும் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவது உறுதி என்று கூறி வருகின்றனர்.

எது எப்படியோ, அந்த பிரபலங்களுக்கு வைரஸ் தொற்று இல்லையென்பது உறுதியான பிறகே, அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியும் என்பதே நிதர்சனம்.

Advertisement