மீரா சொன்ன அதிர்ச்சி குற்றச்சாட்டு! கதறி அழுத சேரன்!

1147

பிக்-பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே தற்போது சக்சஸ்புல்லாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும், வாரம் வாரம் அவர்களின் பங்கிற்கு ஒரு கான்செப்;ட்டை கொடுத்து டீஆர்பி ரேட்டிங்ளை ஏத்திக்கொண்டிருக்கின்றனர்.

இந்த முறை மீரா மிதுன் ஒரு மிகப்பெரிய குண்டைப்போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற டாஸ்க் ஒன்றில், சேரன் என் வயிற்றில் தவறான என்னத்துடன் கைவைத்து கீழே தள்ளினார் என்றார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சேரன், ஹவுஸ்மேட்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு, நான் இனி யாரிடமும் பேசவிரும்பவில்லை என்று கூறிவிட்டு செல்கிறார். பின்னர் உறங்கும் அறைக்கு சென்றுவிட்டு, நான் 2 பெண் குழந்தைகள் வைத்திருக்கிறேன்.

என் மீது இப்படி அபான்டமாக பழி சுமத்தினால், அவர்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறிய படி கதறி அழுகிறார். இதைப்பார்த்து ஹவுஸ்மேட்ஸ்களும் கண்ணீர் விட்டப்படி நிற்கின்றனர்.

மீரா மீதுன் பிக்-பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே, சேரனை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொள்கிறார் என்று குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement