இதுக்கு தான் பிக்-பாஸ்க்கு வந்தாங்களா..? கைது செய்ய காத்திருக்கும் போலீஸ்!

1127

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த முறை நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இவரை தெலுங்கானா போலீஸ் கைது செய்ய, தமிழ்நாடு போலீசின் உதவியை நாடியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. வனிதாவுக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் இடையே கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2012-ஆம் ஆண்டு பிரிந்தனர்.

மகள் ஜோவிதாவுடன் ஆனந்தராஜு தெலுங்கானாவில் வசித்து வந்தார். இந்நிலையில் மகள் ஜோவிதாவை கடந்த பிப்ரவரி மாதம் அனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்து, தேடி வந்தனர். இதனிடையே வனிதா பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். வனிதா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தான் பிக்-பாஸ் வீட்டிற்கு செல்ல இவர் ஒத்துக்கொண்டதாகவும் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of