பிக்-பாஸ் நிகழ்ச்சி.. இந்த வார எவிக்சன் யார்..?

1603

பிக்-பாஸ் நிகழ்ச்சி இதுவரை 26 நாட்களை கடந்துள்ளது. இந்த வார தொடக்கத்தின்போது, எவிக்சனுக்கான தேர்வு நடைபெற்றது.

அதில், ரியோ, பாலா, நிஷா, சோமசேகர், அனிதா, வேல்முருகன், சனம் ஷெட்டி, சுரேஷ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன் ஆகிய 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

சம்யுக்தா, கேபி, ஆரி, அர்ச்சனா, ஷிவானி ஆகிய 5 பேர் மட்டுமே நாமினேஷனில் இருந்து தப்பித்தனர். தமிழ் பிக்-பாஸ் வரலாற்றில் முதன்முறையாக 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், 11 பேரில் குறைவான வாக்குகள் பெற்று, வேல்முருகன் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement