அஜித் பட பாடலுக்கு இவ்வளவு பவரா..? பிக்-பாஸ் வீட்டில் செய்த மாயம்..!

1108

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் 23-ஆம் தேதி தொடங்கி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தற்போது வெறும் 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றை எபிசோடில், பிக்-பாசிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் வந்திருந்தனர்.

மேலும், பிக் பாஸ் வீட்டில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் புகைப்படங்களாக காண்பித்து, அதில் தங்களது மகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டார்.

அதற்கு போட்டியாளர்களும், தங்களது பதில்களை அளித்தனர். மேலும், சூப்பர் சிங்கர் பிரபலங்கள் மூலம் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

அதில் பாடப்பட்ட விஸ்வாசம் படத்தின் கண்ணாணே கண்ணே பாடல், மோகன் வைத்யா மற்றும் மிரா மிதுன் ஆகியோரை அழ வைத்தது. மேலும், இந்த பாடலை கேட்ட மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் சோகமாக இருந்தனர்.

Advertisement