தற்கொலைக்கு முயன்ற மதுமிதா..! “கர்நாடகக்காரன்” தான் காரணம்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

1868

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளும், பல்வேறு பரபரப்புகளும் நிகழ்ந்துக்கொண்டே வருகிறது.

பெண்களை உரசுவதற்காக பேருந்தில் ஏறினேன் என்று சரவணன் கூறினார், வனிதா விஜயகுமார் தனது குழந்தையை கடத்திவிட்டதாக போலீஸ் பிக்-பாஸ் வீட்டிற்கு வந்தது. இவ்வாறு பிக்-பாஸ் வீட்டில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மதுமிதா செய்த செயல் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர் பிக்-பாஸ் வீட்டிற்குள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததன் காரணம் குறித்து நளினியின் மகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, ‘வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே’, எனும் கருத்து கூறியதாகவும், இதற்கு சக போட்டியாளர்கள் மதுமிதாவுடன் வாக்குவாதம் நடத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட தகாராறில் மதுமிதா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்றும் நளினியின் மகள் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று இன்னும் அறியப்படவில்லை. சரி, மதுமிதாவிற்கும், நடிகை நளினி குடும்பத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கலாம்.

நடிகை நளினி தான் மதுமிதாவிற்கு திருமணம் நடத்தி வைத்தார். இதனை அவரே ஒருமுறை பிக் பாஸில் தெரிவித்திருந்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of