இருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..!

3015

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்கள் வரை பரபரப்பாக சென்றுக்கொண்டிருந்த பிக்-பாஸ், நாட்கள் செல்ல செல்ல மந்தமான நிலைக்கு சென்றுவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் ரசிகர்களை மீண்டும் பெற வேண்டும் என்று பிக்-பாஸ் குழுவினர் தீவிர முயற்சியில் ஏற்பட்டு வருகின்றனர் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்கள் குறைந்ததற்கான காரணம் தெரியுமா? என்று கேட்கும் கமல், இது ஒரு விதிமீறல், விதிமீறல் செய்து விளையாட்டில் வெற்றி பெற முடியாது என்பதை விளக்கவே இந்தப் படம் என ஒரு குறும்படத்தை ஒளிபரப்புகிறார்.

இந்த குறும்படத்தில் கவின் மற்றும் லாஸ்லியா இருட்டான இடத்தில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்த குறும்படத்தைப் பார்த்ததும் கவினின் முகமே மாறி விடுகிறது.

Advertisement