பிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

1895

உலக அளவில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்-பாஸ். இந்தியாவில் பலமொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியில், சல்மான் காண் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது, இந்த நிகழ்ச்சியில், ராக்கி சாவந்த் என்ற பிரபல கவர்ச்சி நடிகையும், அபிநவ் சுக்லா என்ற நபரும் கலந்துக் கொண்டுள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகியிருந்தும், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் நெருங்கிப் பழகி வருகின்றனர்.

இது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்து வந்த நிலையில், தற்போது, நடிகை ராக்கி சாவந்த், அபிநவ்-க்கு தனது காதலை வித்தியாசமாக தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான், இந்த விஷயத்தை ஏன் கண்டிக்கவில்லை என்றும் பேசப்பட்டு வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா என்றும் நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

Advertisement