“பிக்-பாஸ் பைனலுக்கு இதுக்குத்தான் வரல..”- உண்மையை போட்டுடைத்த சரவணன்..!

1832

கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய பிக்-பாஸ் நிகழ்ச்சி, பல்வேறு சர்ச்சைகளை கடந்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், முகென் ராவ் என்பவர் வெற்றிப்பெற்றார். இந்த போட்டியாளர்களில் மிகவும் முக்கியமான நபராக கருதப்பட்டவர் சரவணன்.

இவர் பிக்-பாஸ் வீட்டில் இருக்கும் போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார். அதில் முக்கியமானது எது என்றால், கமல் ஹாசன் கேட்ட கேள்வி ஒன்றிற்கு, பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் ஏறியிருந்தேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், பிக்-பாஸ் வீட்டிலிருந்து சரவணன் அதிரடியாக நீக்கப்பட்டார். இவர் பிக்-பாஸ் இறுதிச்சுற்றில் கலந்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலந்துக்கொள்ளாமல் ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில் எதற்காக பிக்-பாஸ் பைனலில் கலந்துக்கொள்ளவில்லை என்று கேட்டதற்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் எங்குமே பேசக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன் என்றும், அந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு ஒரு விஷயமே கிடையாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது நான் என் படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். என்னுடைய ஒரே நோக்கம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது மட்டும் தான் என்று கூறினார்.

Advertisement