கதறி அழும் லாஸ்லியா! கஸ்தூரி சொன்னது உண்மையா..? இன்னிக்கு தெரிஞ்சிடும்!

1601

பிக்-பாக் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 23-ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. தற்போது வரை 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், ஒரு போட்டியாளர் கலந்துக் கொள்ள இருக்கிறார்.

பிக்-பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக, தங்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உண்மையாக தெரிவித்து வருகின்றனர். இதில் இன்னும், லாஸ்லியா, பாத்திமா பாபு, சாக்ஷி, மீரா, சாண்டி ஆகியோர் தங்களது கதைகளை கூறவில்லை.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், பொதுமக்கள் பலரின் கவனத்தை ஈர்த்த இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா, அழுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த நடிகை கஸ்தூரி அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “போதும்பா விட்ருங்கப்பா… இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க… இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை… இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு”

எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலம் கஸ்தூரி பயந்த மாதிரியே நடக்கப் போகிறதோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. எப்படியும் அவர் குடும்பத்தைப் பற்றி பேசினாலும், அதில் நிச்சயம் இலங்கை போர் சம்பந்தப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதனால் இன்றைய எபிசோட்டை லாஸ்லியா ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.