தர்ஷன் கேட்ட நறுக் கேள்வி..! திருதிருவென முழிக்கும் கவின்..! பாராட்டும் நெட்டிசன்கள்..!

702

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் தொடங்கி தற்போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இணையதளங்களில் பிக்-பாசை திட்டி தீர்ப்பவர்கள், வீட்டிற்கு சென்று அந்த பிக்-பாசை போடு என்று சொல்லி வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நபர்கள் பிக்-பாசுக்கு கண்டென்ட் கொடுத்து வருகிறார்கள். ஆனால் எல்லா வாரமும் கன்டென்ட் கொடுப்பவர் கவின். கவின் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்கிறார் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மொத்த ஹவுஸ்மேட்ஸும் கட்டம் கட்டி கவினை வெளுத்து வாங்குகின்றனர்.

எல்லாம் சாக்ஷியுடனான காதல் மற்றும் லாஸ்லியாவுடன் நள்ளிரவையும் தாண்டி நீடிக்கும் ஃபிரன்ஷிப் குறித்துதான். இரவு இரண்டு மணிக்கு மேல் என்ன ஃபிரன்ட்ஷிப் என கவினை கேட்கிறார் தர்ஷன்.

இதேபோல் சரவணனும் கவினை வறுத்தெடுத்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் ஹவுஸ்மேட்சை பாராட்டி வருகின்றனர்.