இது தான் பிக்-பாஸ் புகைப்படமா..? லாஸ்லியாவின் ஆசையை நிறைவேற்றிய பிக்-பாஸ்..!

1427

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்நிகழ்ச்சியில், பிக்-பாஸ் பல்வேறு டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். நேற்று முன்தினம் எபிசோடில், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதன்படி, ஒரு நபர் தனக்கு விருப்பமான ஆசையை ஒரு சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு, கொடுக்கப்பட்டிருக்கும் கால்பந்தில் ஒட்டிக்கொள்ளவேண்டும். பிறகு அந்த பந்தை கண்ணை மூடிக்கொண்டு, கொடுக்கப்பட்டிருக்கும் கோல் போஸ்டில் சரியாக அடித்தால், அதில் எழுதப்பட்டிருக்கும் ஆசையை பிக்-பாஸ் நிறைவேற்றுவார்.

இந்த டாஸ்க்கில் அணைவரும் விதவிதமான ஆசைகளை அந்த சீட்டில் எழுதினார்கள். அதில் லாஸ்லியா, பிக்-பாசின் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்காகவே நல்ல விளையாட வேண்டும் என்று எண்ணி, டாஸ்க்கிளும் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவரின் புகைப்படத்தை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில், ஹவுஸ்மேட்ஸ்கள் உட்பட ஆடியன்சும் இருந்தனர். அடுத்த நாள் எபிசோடின் போது பிக்-பாஸ் அவரது புகைப்படத்தை அனுப்பி வைத்தார். ஆனால் சரியாகவே அவர் தெரியவில்லை.

இது தான் என் புகைப்படம் என்று சொல்லி, ஹவுஸ்மேட்ஸ்கள் அணைவரையும் செமையாக மொக்கை செய்தார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, ஈயம் பூசினா மாதிரியும் இருக்கனும், ஈயம் பூசாத மாதிரியும் இருக்கனும் என்ற கதையை போல் இருக்கின்றது.

Advertisement