அஜித்தை இயக்கிய பிக்-பாஸ் சுரேஷ்.. வெளியான சுவாரசிய தகவல்..

2952

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இளம் போட்டியாளர்கள் பலர் இருந்தாலும், அவர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு, சமயோஜிதமாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இவர் அளித்த பழைய பேட்டி ஒன்று, அஜித் ரசிகர்களின் மூலம் பிரபலமாகி வருகிறது. அந்த பேட்டியில், அஜித் ஒரு மகாத்மா என்றும், அந்த சொல்லுக்கு உண்மையாகவே அவர் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபாவளி ஸ்பெஷலாக ஒரு நிகழ்ச்சியை அஜித்தை வைத்து இயக்கியிருந்தேன் என்றும், அஜித்துடன் ஒரு படத்தில் நடித்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். அஜித் குழந்தை போல் பேசக்கூடியவர் என்றும் சுரேஷ் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement