விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்தும் பிக்பாஸ் தர்ஷன்

524

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களில் தர்ஷனும் ஒருவர். 90 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்த தர்ஷன் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

அவர் தான் இந்தமுறை டைட்டிலை வெல்வார் என்று பார்வையாளர்களும் சக போட்டியாளர்களும் எதிர்பார்த்த நிலையில் அவரது வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன் தற்போது கமல்ஹாசன் சங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு வெளியில் வந்ததும் ஒருசில படவாய்ப்புகளே வருகின்றன. அதிலும் வெளியாகும் படங்கள் மிகக் குறைவே. ஆனால் தர்ஷனுக்கு முதல்வாய்ப்பே கமல்ஹாசனுடன் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படப் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் நடன அசைவுகளை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார் தர்ஷன்.

 

View this post on Instagram

 

Tharshan Dance ??? #tamilsonglyricss2

A post shared by TSL2.0 (@tamilsonglyricss2.0) on

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of