அபிராமியை அழவைத்த வனிதா..! மூக்கை உடைத்த கமல்..! உச்சகட்ட பரபரப்பில் ப்ரோமோ..!

984

பிக்-பாஸ் தொடங்கியதில் இருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள வனிதா விஜயகுமார், மற்ற போட்டியாளர்களிடம் குரலை உயர்த்தி பேசி மற்றவர்களை பேசவிடாமல் செய்கிறார் என்று ரசிகர்கள் செம கோபத்தில் இருக்கின்றனர்.

இவரின் இந்த பேச்சுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், அடங்கி செல்கின்றனர். தர்ஷன் மட்டும் நேற்றைய போட்டியின் போது, வனிதாவிற்கு எதிராக பேசியிருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டிக்கான புரோமே அந்த தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியிருந்தது.

அதில், அபிராமியை பற்றி குறை கூறுகிறார் வனிதா. அதற்கு பதில் அளிக்கும் கமல், உங்களுடைய பேச்சின் மூலம் வேறு ஒருவருக்கு கவனம் சென்றுவிடும் எனும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது.

ஒரு குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாம் பேசும் அளவுக்கு கேட்கவும் வேண்டும் எனக் கூறி வனிதாவின் மூக்கை உடைத்திருக்கிறார். இந்த புரொமோ பிக் பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of