“வெளியே செருப்பால அடிப்பாங்க..” சீறும் நிஷா..! சுரேஷ்-க்கு குளோஸ் அப்..!

3681

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு, தற்போது 18 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கொஞ்சமும் பரபரப்புக்கு குறைவில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், இன்றைய நாளுக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், பட்டிமன்றம் நடப்பதைப்போன்ற டாஸ்கை ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்-பாஸ் அளிக்கிறார். அந்த டாஸ்கின்போது பேசும் நிஷா, “புரளி பேசுவது அழகுங்க.

அது மற்றவர்களின் உருவத்தையோ, உள்ளத்தையோ பற்றி பேசும் போது தான் தவறு. அப்ப தான் வெளியே இருப்பவங்க செருப்பால அடிப்பாங்க” என்று ஆவேசமாக பேசுகிறார்.

இவர் பேசி முடித்ததும், சுரேஷ் சக்கரவர்த்திக்கு குளோஸ் அப் ஷாட் வைக்கிறார்கள். இதனால், இன்றைய எபிசோடிலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement