வனிதாவிடம் தர்ஷன் செய்த செயல்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

1155

கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி அன்று பிக்-பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த 16 பேரில் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதாவும் ஒருவர்.

இவர் பிக்-பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே, பலரிடம் வீண் வம்பு இழுத்து வருகிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மூத்த போட்டியாளர்களான சேரன், மோகன், சரவணன் உள்ளிட்டவர்களும், வனிதாவை எதிர்த்து பேசாமல் அமைதியாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பிக்-பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில், இன்றைய புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், வனிதாவிடம் தர்ஷன் சண்டை போடும் காட்சி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், தர்ஷனை புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement