“வாடா போடா-னு சொல்வேன்..,” சேரனை அடிக்கப்பாய்ந்த சரவணன்..?

1351

பிக்-பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு சண்டை சச்சரவுகளுக்கு இடையில் படுஜோராக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நபர்கள் கண்டென்ட் கொடுத்து வருகின்றனர்.

இந்த முறை சரவணன் தனது பங்கிற்கு கண்டென்ட் கொடுத்துள்ளார். பிக்-பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், உங்களின் நடனம் விஜயகாந்தை போன்று இல்லை என சரவணனிடம் சேரன் கூறுகிறார்.

அதற்கு பொங்கி எழுந்த சரவணன், நீங்க கூட தான் ரஜினி கெட்டப்பில் காமெடியாக இருந்தீர்கள் என்று கூறுகிறார். தீடிரென போயா வாயா என்றும் இனி போடா வாடா என பேசுவேன் என்றும் கொதிக்கிறார்.

பின்னர் என்ன உனக்கு பிரச்சனை என்று அடிப்பது போல், சேரனிடம் எழுந்து சென்று மிரட்டுகிறார் சரவணன். சரவணனுக்கு சேரனுக்கு பிக்-பாஸ் வீட்டிற்கு வெளியே வேறு சில பிரச்சனைகள் இருந்ததாகவும், அதனால் தான் இவர் இவ்வாறு செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement