பிக்-பாசின் மிகமிக அதிரடி நடவடிக்கை..! சரவணனுக்கு நேர்ந்த பரிதாபம்..,!

933

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுலை மாதம் தொடங்கி, தற்போது நல்ல வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு வாரமும் பிக்-பாஸ் கொடுக்கும் அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீளாமல் இருக்கும்போது நேற்று மிகப்பெரிய முடிவை எடுத்து பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால், முந்தைய எபிசோட் ஒன்றில், பெண்களை இடிப்பதற்காகவே பஸ்சில் ஏறியிருக்கிறேன் என்று சரவணன் கூறியிருந்தார். இதற்கு தண்டனை தரும் வகையில், தற்போது சரவணன் பிக்-பாஸ் வீட்டை விட்டு நேரடியாகவே வெளியேற்றப்படுகிறார் என்று பிக்-பாஸ் கூறியுள்ளார்.

அப்பவே இந்த நடவடிக்கையை எடுக்காமல் இப்போது ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், யாரை திருப்திப்படுத்துவற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரு சிலர், வாயை வச்சிக்குட்டு சும்மா இல்லாமா இப்படி பிரச்சனையில் மாட்டிக்கொண்டு வெளியேறிவிட்டாரே என்று சரவணன் மீது பரிதாபம் காட்டுகின்றனர்.

சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று பிக்-பாஸ் கூறிவிட்டார். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்துவிட்டது. இன்று தான் வீட்டில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியும். இதனால் இன்றைய எபிசோட், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.