சிம்புவுக்குள் இப்படி ஒரு குணமா? பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி…

597

இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில்  அதிக வாக்குகளை பெற்று வெற்றியை கண்டார்  முகின் ராவ். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார்.

அவரையடுத்து 3வது இடத்தை லாஸ்லியாவும் 4வது இடத்தை ஷெரினும் பெற்றனர்.

ஆனால் இந்த போட்டி தொடங்கி ஐம்பது நாட்கள் முடியும்வரை தர்ஷன் என்கிற போட்டியாளர்தான் பிக்பாஸ் 3ன் வெற்றியாளர் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். திடீரென கடைசி எலிமினேஷனாக யாரும் எதிர்பார்க்காத வகையில் எலிமினேட் செய்யப்பட்டார்.
இவரின் தோழி என்று அறியப்படுபவர் மாடல் சனம் ஷெட்டி.  அம்புலி,  கதம் கதம், சவாரி, உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமான சனம் ஷெட்டி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதில் என்க்கு நிறைய நடிகர்களை எனக்கு பிடிக்கும் ஆனால் எஸ்.டி.ஆர்-க்கு உண்மையான ரசிகை. அவரை பற்றி கொஞ்சம்தான் தெரியும் ஆனால் அன்பை அளவின்றி கொடுக்கும் உள்ளம் படைத்த ஒரு மனிதரை இவரிடம் தான் கண்டேன்.

அனைவரையும் ஒரே மரியாதை மற்றும் அன்புடன் நடத்துவார். தர்ஷன் மற்றும் எனக்கு நீங்கள் அளித்த உத்வேகம் வேற லெவல். வி லவ் யூ சிம்பு. தர்ஷனுக்கு நீங்கள் பரிசளித்த ‘ஹீரோ’ புத்தகம் மிகவும் பிடித்துள்ளது. என்று கூறியுள்ளார்.