பிகில் ஏற்படுத்திய “திகில்” – காட்சி ரத்தால் பரபரப்பு..!

831

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகிறது. நேற்று சென்னையில் உள்ள பிரபல தேவி திரையரங்கில் ‘பிகில்’ படத்தின் காலை மற்றும் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டது சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் பரபரப்பானது.

 

ஐந்து நாட்களில் 200 கோடி வசூல் என்று சொல்லப்பட்ட ஒரு படத்திற்கு படம் வெளியான ஏழாவது நாளிலேயே காட்சி ரத்தா என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘பிகில்’ படம் தேவி தியேட்டர் வளாகத்தில் தேவி மற்றும் தேவி பாரடைஸ் ஆகிய இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

தேவி தியேட்டரில் 838, தேவி பாரடைஸ் தியேட்டரில் 1047 சீட்டுகள் உள்ளன. எப்படி மழை நாளில் இரண்டு தியேட்டர்களில் ஒரே காட்சிக்கு 2000 பேர் வரை வருவார்கள் என தியேட்டர் தரப்பில் அதற்கு பதிலளித்தார்கள். அதே சமயம் மாலை காட்சியில் இரண்டு தியேட்டர்களிலும் படம் ஓடுவதாகச் சொன்னார்கள்.

இந்த விவகாரத்தால் விஜய் எதிர்ப்பாளர்களுக்கும், விஜய் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் கடும் மோதல் எழுந்தது. ‘பிகில்’ படம் வெளிவந்து இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ளது.

200 கோடி வசூலைக் கடந்து விட்டது என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன, தியேட்டர்காரர்களுக்கு படம் லாபத்தைக் கொடுத்துள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of