பிகில் கதை தொடர்பான வழக்கு நாளை தள்ளிவைப்பு!

344

தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் நிலையில் அந்த படத்தின் கதை திருட்டு என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா,விவேக்,யோகிபாபு,கதிர்,ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஸ் எண்டர்டெயின்மேண்ட் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ராகுன் இசையமைகிறார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இந்த படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பன்னீர்செல்வம் என்கிற செல்வா சென்னை உரிமையல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சிவா தரப்பில் கூறப்பட்டது. இதனால் உரிமையல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் செல்வா.

அதில், ‘256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கதைச் சொல்லி இருந்ததாகவும் அதைத் திருடி ‘பிகில்’ படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார். இ

ந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் ஏஜிஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் அட்லி தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை வரை அவகாசம் கேட்டதால் வழக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of