பிகில் சிறப்பு காட்சி தாமதம்…. ஆத்திரத்தில் தடுப்புகளை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்..! வைரல் வீடியோ

708

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகளில் கூடிய விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

ரசிகர்கள் அதிகளவு கூடியதால் ஒரு சில திரையரங்குகளில் சிறப்புக்காட்சி ஒரு மணி நேரம் தாமதமாக திரைப்படம் தொடங்கப்பட்டது. பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் வெளியிடப்படலாம் என்ற கடைசி நேர அரசாங்க அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் காட்சிகள் அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. ஒரு சில திரையரங்களில் மட்டும் அதிக கூட்டம் காரணமாக ஒரு மணி நேரம் காலதாமதமாக தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை பார்க்க ரசிகர்கள் நள்ளிரவு முதலே கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதிக்கு குவிந்துள்ளனர்.சிறப்பு காட்சி 1 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பாரத்த ரசிகர்கள் அதிகாலை 3 மணியாகும் திரையிடப்படாமல் இருந்ததால் ரவுண்டானா பகுதியில் இருந்த கடைகள், காவல்துறையினரின் தடுப்புகளை அடித்து உடைத்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்துசம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisement