“பிகில்” வெளியானது “தளபதி 63” -யின் “First Look”

1160

தமிழ் சினிமாவை பொறுத்தவரை 80 சதவிகிதம் கதையின் நாயகனை சுற்றியே கதைக்களம் நகரும். பிற மொழிகளை பார்க்கிலும் நமது தமிழ் சினிமா உலகில், கதாநாயகர்களுக்கு இருக்கும் வரவேற்பு சொல்லில் அடங்காதது.

இதற்கு முழுமுதற்கரணம் அந்த கதாநாயகர்களின் அன்பரந்த ரசிகர்களே என்றால் அது சற்றும் மிகையல்ல. தங்கள் அன்பார்ந்த கதாநாயகர்களின் திரைப்பட வெளியீடே இவர்களுக்கு திருநாள்.

ஆனால் இந்த அன்பின் அடுக்கை அந்த ஹீரோக்கள் எளிதில் பெற்றுவிடவில்லை, இயல்பான நடிப்பு, அதற்கேற்ற குணம், பழகும் விதம் என்று பல நிலை கடந்தே ரசிகர்களின் அன்பு என்ற உயர்ந்த சிம்மாசனத்தை பெறுகின்றனர்.

அவ்வாறு “என் குடியிருக்கும் எனது அன்பான ரசிகர்கள்” என்று தன் ரசிகர்களை பார்த்து ஒவ்வொரு முறையும் கூறும் ரசிகர்களின் இளையதளபதி விஜய், நாளை தனது 45வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார், அதுமட்டுமின்றி விஜய் அவர்களின் “தளபதி 63” படத்தின் பெயர் இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.

“கேப்டன் மைக்கேல்”, “வெறித்தனம்”, என்று பல தலைப்புகள் வளம்வந்த நிலையில் அட்லீ இயக்கத்தில், AGS என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் இளையதளபதி இரட்டை வேடத்தில் கலக்கவிருக்கும் “பிகில்” திரைப்படம் விரைவில் திரைக்கு வருமென்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of