நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் – மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் பலி

1059

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக்காய்ச்சல் நோய் காரணமாக 100 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் பார்வையிட்டபொழுது

பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள மருத்துவமனையான ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், 100 குழந்தைகள் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற சிகிச்சை தொடர்பான சந்தேகங்களை அப்பகுதி பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும் அந்த குழந்தைகளுக்கு இரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவு குறைவாக இருந்ததால் இறந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் மேலும் 130 குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்துள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of