பீகாரில் குழந்தைகள் இறந்த மருத்துவமனையின் பின்புறம் மனித எலும்புக்கூடுகள் – அதிர்ச்சி தகவல்

867

பீகாரில் மருத்துவமனைக்குப் பின்புறமுள்ள காலி இடத்தில் மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்செபாலிடிஸ் மூளைக்காய்ச்சலால் 170 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த பீகார் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைப் பின்புறம் காலி இடம் ஒன்று உள்ளது. அந்த காலியிடத்தில் மண்டை ஓடுகள், மூட்டுகள் என ஆடைகள் சுற்றிய நிலையில் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே மனித எலும்புக் கூடுகளை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக 2016-ம் ஆண்டு அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.

சடலங்களை துப்புரவுப் பணியாளர்களே, எலும்புக் கூடுகளாக்கி விற்பதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் இந்த எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.