ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்கூட கட்டடம்

246

பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பள்ளிக்கூட கட்டடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

வட மாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாக கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பீகார் மாநில கத்திஹார் பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளிக்கூட கட்டிடம், கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் போது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முன்பு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை வகுப்புகளை ரத்து செய்து மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of