100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி! முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்! பரபரப்பின் உச்சம்!

958

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பினால். ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 108ஆக அதிகரித்துள்ளது.

300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூளைக்காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

இந்நிலையில்,மூளைக்காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு மேற்கொள்ள வந்தார்.

அப்போது, பொது மக்களும், குழந்தைகளின் உறவினர்களும் முதல்வர் நிதிஷ்குமாரை முற்றுகையிட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of