மத்திய அமைச்சரை கண்டு பிடித்துக்கொடுத்தால் ரூ.15 ஆயிரம்! ஏன் தெரியுமா..?

699

தமிழகத்தில் உள்ளதைப்போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதேபோன்ற நிலை பீகாரிலும் இருந்து வருகிறது. மேலும், அம்மாநிலத்தில், மூளைக்காய்ச்சல் நோய் காரணமாக 100-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தின் கிராமமான ஹரிவன்ஷ்பூரில், குடிநீர் பிரச்சனையை வலியுறுத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதி மக்கள், எங்கள் பகுதி எம்.எல்.ஏக்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5000, எம்.பி மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.15,000 பரிசு அளிக்கப்படும்’ என அறிவிப்பு வெளியிட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் பேசும்போது,

“நாங்கள் தினசரி பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஆனால் எங்கள் தொகுதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு எங்களை சந்திப்பதற்கு நேரம் இல்லை. 7 குழந்தைகள் இறந்துள்ளனர்.

ஆனால் எங்கள் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பஸ்வான் 5 ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். இந்த அரசியல்வாதிகள் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கின்றனர்.

தேர்தலில் வென்ற பிறகு ஓட்டு போட்டதற்கு நன்றி மட்டும் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் எங்களை மறந்துவிடுகிறார்கள்” என்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of