நேருக்கு நேர் மோதிய பைக்குகள்..! மோதிய பின் வந்த ஆபத்து..! துடிதுடித்து பலியான இரண்டு பேர்..!

692

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார், தளி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அதே போல், வல்லகுண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகரனும், தனது இருசக்கர வாகனத்தில் அதே சாலையில் எதிரே வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஜிலேபி நாயக்கன் பாளையம் என்ற இடத்தில் இரண்டு இருசக்கர வாகனமும் எதிர் எதிரே பயங்கரமாக மோதிகொண்டது. இதில், இருவரும் தலையில் பலத்த காயத்துடன் கீழே விழுந்து மயங்கினர்.

அப்போது எதிர்பாரத விதமாக இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் மயக்கநிலையில் இருந்த இருவர் உடலிலும் தீ பற்றி எரிந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவர் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of