அபிநயாவின் கோரிக்கையை நிறைவேற்றிய நண்பன்..! ஆனா கடைசியில இப்படி ஆயிடுச்சே..!

530

சென்னை பல்லாவரம் அருகே உள்ள குன்றத்தூர் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிருக்கு போரடிக் கொண்டிருந்த ஒரு ஆணையும், இறந்த நிலையில் இருந்த இளம்பெண் ஒருவரையும் பார்த்தனர்.

இதையடுத்து அந்த ஆணை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், அந்த ஆணின் பெயர் அண்ணாமலை என்றும், உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் அபிநயா என்றும் தெரிய வந்தது. மேலும், அபிநயா காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள ஷோ ரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அபிநயாவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென அபிநயா தான் செய்துக்கொண்டிருந்த வேலையில் இருந்து நின்றுவிட்டார். சம்பள பாக்கியை பெற வேண்டும் என்று தனது வீட்டில் கூறிவிட்டு, ஆபிசிற்கு அண்ணாமலையுடன் சென்றுள்ளார்.

அப்போது, எனக்கு பைக் ஓட்ட கத்து தரியா என்று அபிநயா அண்ணாமலையிடம் கேட்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அண்ணாமலை, பைக்கை அவரிடம் கொடுத்துவிட்டு பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டுள்ளார்.

பிறகு அபிநயா வண்டியை ஓட்டத் தெரியாமல் ஓட்டி தடுப்பு சுவரில் மோதியதாகவும், அப்போது சுவரில் இருந்த கம்பி உடல் முழுவதும் குத்திக்கொண்டு அபிநயா உயிரிழந்தாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.