அதிவேகமாக வந்த வாகனம்! தூக்கி வீசப்பட்ட இளம்பெண்! பதறவைக்கும் காட்சி!

939

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி பகுதியை சேர்ந்தவர் மேரி ஜெலின்.

இவர் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது இடது புறத்தில் இருந்து அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், அந்த பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், இளம்பெண்ணும், இளைஞரும் படுகாயம் அடைந்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர், காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதனையறிந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.