சாலையில் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென பற்றிய தீ

309

சென்னை சோழிங்கநல்லூர் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வேளச்சேரியில் இருந்து சுபாஷ் என்ற மாணவர், செம்மஞ்சேரியில் உள்ள கல்லூரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அவர் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்த போது, திடீரென அவரது இருசக்கர வாகனத்தில் தீப்பற்றியது. இதனை அறிந்த மாணவர் சுபாஷ் உடனடியாக இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதை கண்ட போக்குவரத்து காவலர் பிரகாஷ், அங்கிருந்த தேநீர் கடை ஒன்றில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைத்தார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of