தெருவோரம் நிறுத்தப்படும் வண்டிகள்! “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்!”

614

சென்னை அபிராமபுரம் அருகேவுள்ள சிவி ராமன் சாலையில் நள்ளிரவு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கணேஷ் என்பவனை ரோந்து பணியில் இருந்த அபிராமபுர காவலர் சுபாஷ் பிடித்து விசாரித்தார்.

அப்போது இரவு நேரங்களில், சாலைகளில் ஓரங்கப்பட்டிருக்கும் டெம்போ, டாட்டா ஏஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் இருந்து பணம், செல்போன்களை திருடி வந்ததாக தெரிவித்தான்.

மேலும் ஆழ்வார்பேட்டையில் நின்றிருந்த டெம்போவிலிருந்து 2 செல்போன்கள், 2 கைக்கடிகாரங்கள் மற்றும் 480 ரூபாயை திருடி வந்தபோது, சிக்கிக்கொண்டதாக தெரிவித்தான்.

இதையடுத்து கணேஷை கைது செய்த காவலர், செல்போன் திருட்டு நடந்த இடம் தேனாம்பேட்டை சரகத்துக்கு உட்பட்டது என்பதால், பறிமுதல் செய்த பொருட்களை தேனாம்பேட்டை பொறுப்பு காவலர் நாசரிடம் ஒப்படைத்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of