அப்ப அது உண்மையில்லையா..? பிகில் தயாரிப்பாளரின் டுவீட்டால் அதிர்ந்த விஜய் ரசிகர்கள்..!

1495

இளையதளபதி விஜயுடன் 3-வது முறையாக அட்லீ இணையும் திரைப்படம் பிகில். நயன்தாரா, பரியேறும் பெருமாள் கதிர், இந்துஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், “பிகில் படத்தின் ரீலிஸ் தேதி குறித்து வதந்திகளை பரப்பாதீர்கள். பிகில் படத்தின் ரிலீஸ் தேதி, தனிக்கைக்கு சென்ற பிறகே முடிவு செய்யப்படும். இன்று 6 மணிக்கு புதிய போஸ்டர் வெளியாகும்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement