“இது தான் ஊமைக்குத்து!” ரஹ்மானை வம்பிழுத்த கஸ்தூரி! பிகில் பாடல் வெளியீடு!

1637

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்கு பிறகு அட்லீ தற்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது.

இதில் விஜய் அப்பா-மகன் என்று இருவேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் இடம்பெற்றிருக்கும் சிங்க பெண்ணே என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு புறம் அதிர்ச்சியில் இருக்க, படக்குழுவினர் மறுபுறும் பாடல் வெளியானது எப்படி அந்த கருப்பு ஆடு யார் என்று குழம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சமூகத்தில் எது நடந்தாளும் முந்தியடித்துக்கொண்டு கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, தற்போது இதற்கும் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“லீக் ஆனா என்ன? ஏற்கனவே கேட்ட பாட்டுக்கள்தானே . புதுசா பிகில் சவுண்ட் மட்டும் சேர்த்துருக்கு. நல்லாத்தான் இருக்கு” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த கமெண்டை ‘இது தான் ஊமைக்குத்து’ என நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of