பிகில் நாளை வெளியீடு..! தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பால் பரபரப்பு..!

2718

தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக அட்லி இணையும் படம் பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், நயன்தாரா, கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பை தமிழ் ராக்கர்ஸ் கிளப்பியுள்ளது.

தமிழ்ராக்கர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை வெளியிட்டுள்ளது. அதில், நாளை பிகில் படம் நாளை தமிழ் ராக்கர்ஸில் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement