“I Am Back..” மீண்டும் மீண்டு வந்த பில்கேட்ஸ்..! பின்தங்கிய அமேசான்..!

425

உலக கோடீஸ்வரர்களில் மிகவும் முக்கியமானவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ்.

பல தொழில் அதிபர்களுக்கு முன்னோடியாக திகழும் இவர், கடந்த 2 வருடங்களாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பெறாமல் இருந்தார்.

இந்நிலையில் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ப்ளூம்பெர்க் நிறுவனம் 2019-ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.

அதில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் உள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன், கணினி சேவை தொடர்பான ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட்டிடம் அளித்ததே, பில்கேட்ஸின் சொத்து மதிப்பு உயர்ந்ததற்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.