அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு வரும் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்

512

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு வரும் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள  7ஆயிரத்து 726 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு பள்ளிக்கு இரண்டு வீதம் மொத்தம் 15ஆயிரத்து 452 வருகைப் பதிவு கருவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 மாவட்டங்களில் கல்வி அலுவலகங்களில் பணிபுரிவோருக்கும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக 978 அலுவலகங்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு கருவிகள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயோ மெட்ரிக் வருகைப் பதிவு கருவிகளை பெற்றுக் கொண்ட அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அதற்கான சான்றிதழை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையால், ஆசிரியர்கள் பள்ளிக்கு கால தாமதமாக வருவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of