அதிகாரிகள் லேட்டா வந்தா ஆப்பு தான் – அரசின் அதிரடி திட்டம்!

621

புதுச்சேரி அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்களும், அதிகாரிகளும் பெரும்பாலானோர் சரியான நேரத்துக்குப் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பல ஊழியர்கள், அதிகாரிகளின் இருக்கைகள் காலியாக இருப்பதைக் கண்ட அவர், அதுகுறித்து அங்குள்ள ஊழியர்களிடம் விசாரித்தார். அப்போது, அவர்கள் சிலர் விடுப்பு எடுத்திருப்பதாகவும், சிலர் தாமதமாக வருவதற்கு முன் அனுமதி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலருக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது, பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு தலைமைச் செயலகத்தில் மட்டும் உள்ளது.

என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, வாடகைப்படி உயர்வு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் அரசு ஊழியர்கள், மக்களுக்கான சேவைகளை பணிக்கு குறித்த நேரத்தில் வந்து, சரிவரச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of