தமிழ் மரபுப்படி பிறந்தநாள் கொண்டாட்டம்! குவியும் பாராட்டுகள்!

670

அந்நிய கலாச்சாரங்களிலும், பழக்கவழக்கங்களிலும் பெரும்பாலானவர் மூழ்கி கிடப்பதாக தமிழ் ஆர்வலர்கள் பலர் புகார் கூறி வருகின்றனர். இதனால் நம் கலாச்சாரங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் அவர்களது மகனுக்கு தமிழ் மரபுப்படி பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதாவது, பிறந்தநாள் அன்று இன்றைய சூழ்நிலையில் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர்.

ஆனால் இந்த சிறுவனுக்கு, தர்ப்பூசணிப் பழத்தை வெட்டவைத்து, திருக்குறள்களை ஓதி தமிழ்மரபிலான பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த பாராட்டைப் பெற்றிருக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of