அவர் ஒரு மோசடி பேர்வழி – பிருந்தா காரத்

424
brindhacrt13.3.19

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிதியளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசினார்.

பிரதமர் மோடி தன்னை டீ கடை நடத்தியவர் என்றும், அடித்தட்டு மக்களின் நிலையை உணர்ந்தவர் என்றும் கூறுகிறார். கஜா புயலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு புதுக்கோட்டையில் டீ கடை நடத்தி வரும் சிவக்குமார், தனது வாடிக்கையாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் தான் உண்மையான டீ கடைக்காரர். டெல்லியில் அமர்ந்து இருப்பவர் மோசடி பேர் வழி.

ரபேல் விவகாரத்தில் ஊழல் செய்து விட்டு ஆவணங்களை காணவில்லை என்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் குட்காவில் ஊழல் செய்து விட்டு ஆவணங்களை காணவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். 65 ஆண்டுகளாக லாபம் ஈட்டி வந்த பெல் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம்.

2014 பாராளுமன்ற தேர்தலில் மோடியா? இந்த லேடியா? என்று கேட்ட ஜெயலலிதாவை, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வினர் மறந்து விட்டு இன்று மோடியை டாடி என்று அழைக்கும் அளவுக்கு தாழ்ந்து விட்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ள தேர்தல் மூலம் டெல்லியின் புதிய அரசையும், அதே நாளில் 18 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் புதிய அரசையும் உருவாக்கும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of