பிஸ்கோத் திரைப்படம் எப்படி உள்ளது..? திரைவிமர்சனம்..!

10926

கதைச்சுருக்கம்:-

சந்தானத்தின் அப்பா உயிரிழந்ததும், அவர் நடத்தி வரும் பிஸ்கேட் நிறுவனத்தை, தந்தையின் உயிர் நண்பன் அபகரித்துக்கொள்கிறார். இந்த நிறுவனத்திற்கு உரிமையாளராக மாற வேண்டும் என்ற ஆசை சந்தானத்திற்கு உள்ளது.

இதற்கிடையே, அறிமுகமாகும் சௌகார் ஜானகி, சந்தானத்திற்கு தினமும் இரவில் கதை சொல்கிறார். அவர் சொல்லும் கதை நிஜத்திலும் நடக்கிறது. இதனால், நல்ல விஷயங்கள் பல சந்தானத்தின் வாழ்க்கையில் நடக்கிறது.

இதற்காகவே சௌகார் ஜானகியிடம், சந்தானம் தினமும் கதை கேட்கிறார். இறுதியில், ஒரு மோசமான கதையை சொல்ல, அந்த விஷயமும் உண்மையில் நடக்கிறது. இதனால், பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் சந்தானம் எப்படி தப்பிக்கிறார்..? அந்த பிஸ்கட் நிறுவனம் சந்தானத்திற்கு சொந்தமானதா என்பதே மீதிக்கதை..

திரைவிமர்சனம்:-

படத்தின் ஆரம்பம் நன்றாகவே தொடங்கினாலும், நேரம் செல்ல செல்ல காமெடிக்கான பற்றாக்குறை ஏற்படுகிறது. கவுண்டர்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கும் சந்தானம், ஒரு அளவிற்கு மேல் சலிப்படைய வைக்கிறார்.

ஆங்காங்கே, வரும் சில காட்சிகள், கதையை வேகப்படுத்துகிறது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே, படம் வலுவிலக்கிறது. இப்படியே சென்றுக்கொண்டிருக்க, திடீரென படம் முடிந்துவிடுகிறது.

அட.. என்னப்பா இது என்று சொல்ல வைக்கிறது படத்தின் கிளைமேக்ஸ்.. குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும் என்பதற்காக, இப்படி செய்வது, ரசிகர்களின் கோபத்திற்கு தான் வழிவகுக்கும். 300, பாகுபலி ஆகிய படங்களை கலாய்க்கும் போது வரும் காமெடிகள், ஆறுதல் அளிக்கின்றன..

சில இடங்களில், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் சிரிக்க வைக்கின்றனர். வழக்கமாக சந்தானம் படங்களை நினைத்து திரையரங்கிற்கு சென்றால், ஏமாற்றமே மிஞ்சும்.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் நலம்.

Advertisement