பாஜக-வின் 100 நாட்கள் ஆட்சி.. மிகப்பெரிய வளர்ச்சி..! -பிரதமர் மோடி பெருமிதம்

299

பாஜக-வின் 100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களும், வளர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரோடக் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, 2 வது முறையாக ஆட்சியமைத்த பின் முதல் 100 நாள்களில், வேளாண்மை, தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஏராளமான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், கடந்த 60 ஆண்டுகளில் எந்த கூட்டத்தொடரிலும் இப்படி நடந்ததில்லை என்று தெரிவித்தார். கடந்த 100 நாள்களில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள் வருங்காலத்தில் பலன் அளிக்கும் என்று பெருமையுடன் பிரதமர் கூறினார். 

Advertisement