பாஜக மிரட்டி கட்டாயக் கல்யாணம் போல் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது – நாராயணசாமி

141

அ.தி.மு.க – ப.ஜ.க கூட்டணி கட்டாயக் கல்யாணம் போன்றது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய பா.ஜ.க ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த நலத் திட்டங்களையும் செயல்படுத்தாத மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியையும் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க-வை மிரட்டி பா.ஜ.க கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்த அவர், இது ஒரு கட்டாயக் கல்யாணம் என்றும் விமர்சித்தார்.