5 தொகுதிகளுக்கு சரண்டரானது ஏன்? – எடப்பாடியின் பேச்சுக்கு அசந்துபோன அமித்ஷா

664

அதிமுக வுடன் பாஜக 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது எப்படி? என்ற கேள்விகளுக்கு தற்பொழுது பதில் கிடைத்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக 8 தொகுதிகளும், பாஜக 5 தொகுதிகளும் பெற்று நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளனர்.

இந்த நிலையில் பாஜக 5 தொகுதிகளுக்கு சரண்டரானதற்கு காரணம் இது தான் என தகவல்கள் கசிந்துள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வந்திருந்தார்.

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து நேற்று பரபரப்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு பாஜக தலைவர்களை வியப்பில் ஆழ்த்தியதாம். ஆரம்பம் முதலே இரண்டு இலக்க எண்களில் தொகுதிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பாஜக குறைந்தது 8 தொகுதிகளாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு பாஜக 5 தொகுதிகளுக்கு அடங்கி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் பாஜக வின் பலம் குறித்து புள்ளி விபரங்களை எடுத்துவிட்டதுதான் இந்த சரண்டருக்கு காரணம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக பாஜக வின் பலம் என்ன என்பதை பழனிச்சாமி புட்டுபுட்டு வைக்க, ”அட ஆமால்ல… என பாஜக தலைவர்கள் அசந்துவிட்டார்களாம்..

அதுமட்டுமல்லாமல் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் பாஜக தொகுதிகள் குறித்து சிந்தித்து களம் காணவேண்டும். 5 தொகுதிகளை நாங்கள் வெறும் தொகுதிகளாக தரவில்லை.மாறாக 5 எம்.பி க்களாக தருகிறோம் என உத்திரவாதம் அளித்த முதல்வரின் பேச்சைக் கேட்டு வாயடைத்து போன பியூஸ் கோயல், அமித்ஷா விற்கு போன் செய்து நடந்ததை கூறியிருக்கிறார். இதனால் அமித்ஷாவும் அட பாருடா… நம்மல விட நம்ம கட்சியோட பலத்த பத்தி நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்காரே! என பழனிச்சாமியை பாராட்டினாராம். இந்த நிலையில் தான் 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முனைப்பில் இறங்கியிருக்கிறது பாஜக.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of